இரவில் சூரியன்
பகலில் நிலா
காதலில் நான்!
தூக்கத்தில் விழிப்பு
விழிப்பில் கனவு
காதலில் நான்!
திங்களில் வீட்டிலிருந்தேன்
ஞாயிறில் வேலைக்குச்சென்றேன்
காதலில் நான்!
தனிமையில் பேச்சு
கூட்டத்தில் அமைதி
காதலில் நான்!
பட்டாம்பூச்சி தேவதையாய்
தேவதைகள் பட்டாம்பூச்சியாய்
காதலில் நான்!
சோகத்தில் சிரிப்பு
மகிழ்சியில் அழுகை
காதலில் நான்!
விரலால் எழுதுகிறேன்
பேனாவால் கிறுக்குகிறேன்
காதலில் நான்!
காற்றை காண்கிறேன்
காட்சியை தவறுகிறேன்
காதலில் நான்!
வெயிலில் நனைகிறேன்
மழையில் காய்கிறேன்
காதலில் நான்!
பூமியில் உடல்
ப்ளூட்டோவில் மனம்
காதலில் நான்!
கடிகாரம் ஓடுகிறது
காலமோ நிற்கிறது
காதலில் நான்!
'இன்றி'ல் இருந்துகொண்டு
'நேற்றி'ல் வாழ்கிறேன்
காதலில் நான்!
கற்பனை இல்லாதே
கவிதைகள் கருவாகும்
காதலில் நான்!
யாருக்கும் சொல்லாமல்
எல்லோர்க்கும் சொல்கிறேன்
காதலில் நான்!
கண்ணில் அவள்
காட்சியில் அவள்
காதலில் நான்!
பகலில் நிலா
காதலில் நான்!
தூக்கத்தில் விழிப்பு
விழிப்பில் கனவு
காதலில் நான்!
திங்களில் வீட்டிலிருந்தேன்
ஞாயிறில் வேலைக்குச்சென்றேன்
காதலில் நான்!
தனிமையில் பேச்சு
கூட்டத்தில் அமைதி
காதலில் நான்!
பட்டாம்பூச்சி தேவதையாய்
தேவதைகள் பட்டாம்பூச்சியாய்
காதலில் நான்!
சோகத்தில் சிரிப்பு
மகிழ்சியில் அழுகை
காதலில் நான்!
விரலால் எழுதுகிறேன்
பேனாவால் கிறுக்குகிறேன்
காதலில் நான்!
காற்றை காண்கிறேன்
காட்சியை தவறுகிறேன்
காதலில் நான்!
வெயிலில் நனைகிறேன்
மழையில் காய்கிறேன்
காதலில் நான்!
பூமியில் உடல்
ப்ளூட்டோவில் மனம்
காதலில் நான்!
கடிகாரம் ஓடுகிறது
காலமோ நிற்கிறது
காதலில் நான்!
'இன்றி'ல் இருந்துகொண்டு
'நேற்றி'ல் வாழ்கிறேன்
காதலில் நான்!
கற்பனை இல்லாதே
கவிதைகள் கருவாகும்
காதலில் நான்!
யாருக்கும் சொல்லாமல்
எல்லோர்க்கும் சொல்கிறேன்
காதலில் நான்!
கண்ணில் அவள்
காட்சியில் அவள்
காதலில் நான்!
//சோகத்தில் சிரிப்பு
ReplyDeleteமகிழ்சியில் அழுகை
காதலில் நான்!//
நீங்க மட்டுமா????
அனைத்தும் ரசிக்கத்தக்க கவிதைகள்...
உங்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
ReplyDeleteநல்ல மனநல மருத்துவரை அனுகுவது நல்லது :)
பை தி வே கவிதை சூப்பரப்பு
ஹைக்கூ கலக்கல்
ReplyDeleteஎல்லாமே பிடிச்சிருக்கு.
ReplyDeleteகாதல் வந்திட்டா எல்லாமே எல்லாருமே இப்பிடித்தானோ !
என்னோடு சேர்ந்துகொண்ட பாலாசி-க்கும்,
ReplyDeleteமனநல மருத்துவருக்கு பரிந்துரைத்த நாஞ்சில் பிரதாப்-க்கும்,
பாராட்டிய Nanrasitha (நான் இரசித்த)-க்கும்,
ஹேமா-க்கும் மிக்க நன்றி!
//விரலால் எழுதுகிறேன்
பேனாவால் கிறுக்குகிறேன்
காதலில் நான்!//
இதுதான் என்னை ஆளும் காதல் ஹேமா!
நன்றியுடன்,
விஜய்