இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Wednesday 3 February, 2010

காதலில் நான் - ஹைக்கூ (வகையில்)

ரவில் சூரியன்
பகலில் நிலா
காதலில் நான்!

தூக்கத்தில் விழிப்பு
விழிப்பில் கனவு
காதலில் நான்!

திங்களில் வீட்டிலிருந்தேன்
ஞாயிறில் வேலைக்குச்சென்றேன்
காதலில் நான்!

னிமையில் பேச்சு
கூட்டத்தில் அமைதி
காதலில் நான்!

ட்டாம்பூச்சி தேவதையாய்
தேவதைகள் பட்டாம்பூச்சியாய்
காதலில் நான்!

சோகத்தில் சிரிப்பு
மகிழ்சியில் அழுகை
காதலில் நான்!

விரலால் எழுதுகிறேன்
பேனாவால் கிறுக்குகிறேன்
காதலில் நான்!

காற்றை காண்கிறேன்
காட்சியை தவறுகிறேன்
காதலில் நான்!

வெயிலில் நனைகிறேன்
மழையில் காய்கிறேன்
காதலில் நான்!

பூமியில் உடல்
ப்ளூட்டோவில் மனம்
காதலில் நான்!

டிகாரம் ஓடுகிறது
காலமோ நிற்கிறது
காதலில் நான்!

'இன்றி'ல் இருந்துகொண்டு
'நேற்றி'ல் வாழ்கிறேன்
காதலில் நான்!

ற்பனை இல்லாதே
கவிதைகள் கருவாகும்
காதலில் நான்!

யாருக்கும் சொல்லாமல்
எல்லோர்க்கும் சொல்கிறேன்
காதலில் நான்!

ண்ணில் அவள்
காட்சியில் அவள்
காதலில் நான்!

5 comments:

  1. //சோகத்தில் சிரிப்பு
    மகிழ்சியில் அழுகை
    காதலில் நான்!//

    நீங்க மட்டுமா????

    அனைத்தும் ரசிக்கத்தக்க கவிதைகள்...

    ReplyDelete
  2. உங்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
    நல்ல மனநல மருத்துவரை அனுகுவது நல்லது :)

    பை தி வே கவிதை சூப்பரப்பு

    ReplyDelete
  3. ஹைக்கூ கலக்கல்

    ReplyDelete
  4. எல்லாமே பிடிச்சிருக்கு.

    காதல் வந்திட்டா எல்லாமே எல்லாருமே இப்பிடித்தானோ !

    ReplyDelete
  5. என்னோடு சேர்ந்துகொண்ட பாலாசி-க்கும்,
    மனநல மருத்துவருக்கு பரிந்துரைத்த நாஞ்சில் பிரதாப்-க்கும்,
    பாராட்டிய Nanrasitha (நான் இரசித்த)-க்கும்,
    ஹேமா-க்கும் மிக்க நன்றி!

    //விரலால் எழுதுகிறேன்
    பேனாவால் கிறுக்குகிறேன்
    காதலில் நான்!//
    இதுதான் என்னை ஆளும் காதல் ஹேமா!

    நன்றியுடன்,
    விஜய்

    ReplyDelete