கிழிக்காமல் வைத்த
என் கடைசி முயற்சியும்
தோற்றுப்போனது – வந்துவிட்டதே
நாம் பிரியப்போகும்
இந்த நாள்!
நிறத்திற்கு ஒன்றாய் மிட்டாய்கள்,
கைத்தட்டும் குரங்கு பொம்மை,
அஷ்டகோணலான அப்பாவின் முகம்,
எதற்கும் சமாதானமாகாமல்
தாய் தேடும் குழந்தையாய்
தேடிக்கொண்டிருப்பேன் உன்னை
என்றாவது ஒருநாள்
என் வாழ்க்கையில்...
கைத்தட்டும் குரங்கு பொம்மை,
அஷ்டகோணலான அப்பாவின் முகம்,
எதற்கும் சமாதானமாகாமல்
தாய் தேடும் குழந்தையாய்
தேடிக்கொண்டிருப்பேன் உன்னை
என்றாவது ஒருநாள்
என் வாழ்க்கையில்...
பிடித்த பாடல் பிரதிபலிக்கும்
உன் நினைவின் தாக்கத்தில்
என் இதழ் தோன்றும்
நொடிப்புன்னகைக் கேட்கிறது
“என்று சந்திப்பேன்
மீண்டும் உன்னை?” என்று!
நீ இரவல் வாங்கிய
என் புத்தகம்,
நான் திருப்பித் தராத
உன் பேனா,
வானொலியில் கசியும்
உனக்குப் பிடித்த பாடல்,
நோட்டின் ஓரத்தில்
கிறுக்கிய பெயர்கள்,
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்,
என் கைப்பேசியில் பூக்குமுன்
“நல்லிரவு” குறுஞ்செய்தி...
ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது
உன்னை எனக்கு நினைவூட்ட...
என் புத்தகம்,
நான் திருப்பித் தராத
உன் பேனா,
வானொலியில் கசியும்
உனக்குப் பிடித்த பாடல்,
நோட்டின் ஓரத்தில்
கிறுக்கிய பெயர்கள்,
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்,
என் கைப்பேசியில் பூக்குமுன்
“நல்லிரவு” குறுஞ்செய்தி...
ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது
உன்னை எனக்கு நினைவூட்ட...
பிரிவுக்குத் தயாரானேன்
நினைவுகளை டைரியில் பதித்து,
எவ்வளவுதான் எழுதினாலும்
இடமிருக்கிறது இன்னும்
எழுத முடியாதவற்றை எழுத!
என்றோ எதையோ
தேடும் பொழுதில்
கிடைப்பதற்காகவே வைத்திருப்பேன்
அலமாரி புத்தகத்தின் நடுவில்
நண்பா, நம் புகைப்படத்தை...
தேடும் பொழுதில்
கிடைப்பதற்காகவே வைத்திருப்பேன்
அலமாரி புத்தகத்தின் நடுவில்
நண்பா, நம் புகைப்படத்தை...
எதிர்பாராத தொலைப்பேசி அழைப்போ
யதேச்சையான வழிப்பாதைச் சந்திப்போ
ஒரு நண்பன் போதுமே – தொட்டுத் தொட்டு
அனைவரின் நினைவையும் அசைபோட;
இரயில் பெட்டிகளாய் இணைந்த நினைவுகள்!
பிரிய முடியாத நட்பின் பிணைப்பைச் சொல்லும் கவிதை!! மாறுபட்ட கோணத்தில் பார்த்திருக்கும் கவிதை!! அருமை!!
ReplyDelete