இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 15 July, 2010

வேண்டும் ஓர் காஸ்ட்ரோ!

கடந்த மாதம் படிக்கத் துவங்கி, பின் பாதியில் நிறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் படிக்கத் துவங்கிய கிழக்கு பதிப்பகத்தின் “சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ” நூலை நேற்றுதான் படித்து முடித்தேன், ஃபிடலைப் படித்தவுடன் இன்றைய இந்தியாவின் நிலை ஏறத்தாழ அன்றைய க்யூபாவின் நிலையிலிருந்து சற்றும் வேறானதல்ல என்ற ஒரு கருத்து தோன்றியது, அதன் விளைவு இந்தக் கவிதை (என்று நான் நினைக்கும் சொற்கோவை!) படித்துப் பாருங்கள், தோன்றுவதை தோன்றிய வண்ணம் சொல்லிவிட்டு போங்கள்...

ர்வாதிகாரம் இல்லை
ஆனால்
சர்வத்திற்கும் அதிகாரம் உண்டு,

பொருளாதாரத் தடை இல்லை
எந்தப்
பொருளையும் வாங்கப் பொருளில்லை,

அந்நிய செலாவனிக்கு குறைவில்லை
பலருக்கு
அன்றாட உணவுக்கே வழியில்லை,

கல்வி சாலைகளில் குறைவில்லை
கிடைக்கும்
கல்வி அதனில் தரமில்லை,

உடலைப் பேண மருந்தில்லை
ஏழை
உயிருக்கு இங்கே மதிப்பில்லை,

உழைப்பவருக்கு உயர்வில்லை
வளரும்
ஊழல் அதற்குத் தடையில்லை,

காலனி ஆதிக்கம் இன்றில்லை
நடக்கும்
களவானி ஆட்சிக்கு முடிவில்லை,

முதலாளித்துவம் இங்கில்லை
எனநம்பும்
முட்டாள்களுக்கும் குறைவில்லை,

நடக்குது ஒர் மக்களாட்சி
மக்களை
கொண்டல்ல அவரைக் கொன்று,

இது க்யூபா அல்ல
இருந்தும்
இங்கும் வேண்டுமோர் காஸ்ட்ரோ!


முட்டாள்தனம் - ஹைக்கூ

ஃபிடலைப் படித்துவிட்டு
பேனாவைத் தேடுகிறேன்
போர்வாளை விட்டுவிட்டு!


நூலைப் படித்துப் பாருங்கள்...
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

4 comments:

  1. அன்பான நண்பர் திரு விஜய்,

    காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்! அதேபோல புரட்சி புகழ்ச்சியாளர்களுக்கு அறிவும் இல்லை என்று சொல்லலாம்!!

    கியூபாவை நாசம் செய்து, ஒரு நூறாண்டுகள் அந்த நாட்டை பின்னால் இட்டுச்சென்ற ஒரு சர்வாதிகாரிக்கு கவிதை மட்டும்தான் பாக்கி! அது என்னவோ, நாசம் செய்பவர்களுக்கும் சர்வாதிகார அக்கிரமம் செய்தவர்களுக்கும் சாமரம் வீச ஒரு கும்பல் (மிக மிக சிறிதானாலும்) இருந்து கொண்டேதான் இருக்கிறது!!

    நண்பரே, புரிந்துகொள்ளுங்கள், காஸ்ட்ரோ ஒரு கடைந்தெடுத்த சர்வாதிகாரி! வேறு எவரையும் ஆட்சிக்கு வரவிடாத, ஜனாயகம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு ஆதிக்கவாதி! கியூபாவின் பொருளாதாரத்தை சீரழித்த ஒரு அறிவிலி! மக்களின் வாழ்க்கைதரத்தை முற்றிலும் நாசமாக்கிய ஒரு ஆட்ச்சியாளர்! தற்போது தன சகோதரரை ஆட்சி கட்டிலில் ஏற்றி அழகுபார்க்கும் ஒரு குடும்ப புரட்சியாளர்!

    கியூபாவின் நிலைமை இன்று மிக மிக மோசம்!! சோவியத் யூனியன் இருந்த வரையில் அவர்கள் இட்ட பிச்சையில் காலம் தள்ளிய ஒரு தேசம்! இந்த பரட்சி பொய்யர்கள் ஆட்சிக்கு வரும்வரை மிக செல்வா செழிப்பாக இருந்த ஒரு நாட்டை, உலகில் மிக எழமையான நாடுகளில் ஒன்றாக மாற்றிய வல்லுநர் இவர்!
    சரித்திரம் மட்டுமல்ல, ஆவணங்கள் முதல் உயிருடன் இருக்கும் சாட்ச்சியங்கள் வரை, புள்ளி விவரங்கள் முதல், எதிரில் நிற்கும் காட்ச்சிகள் வரை கியூபாவின் நிலைமையை விவரித்த பின்னரும் கூட, உங்களை போன்ற வெகு சிலர் இந்த நாசக்காரரின் சர்வாதிகார அழித்தல் முறையை கும்பிடுவது சிரிப்பைதான் வரவைக்கிறது!!


    போதா குறைக்கு கவிதை வேறு எழுதி இருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. கியூபா போல நாடுகள் தோன்றலாம்... இனி காஸ்ட்ரோ போல யார் தோன்றுவார்கள்?

    கவிதை வெப்பம்!

    ReplyDelete
  4. அன்பு நண்ப NO,

    என் பார்வையை மட்டுமே கருத்தில் கொண்டு சிந்திப்பதில் கண்மூடித்தனம் இருக்குமானால் அதற்காய் நான் வருந்தமாட்டேன், ஏனெனில் நம் ஒவ்வொருவருமே அவ்வாறுதானே செய்கிறோம்... காஸ்ட்ரோவை தாங்கள் சர்வாதிகாரி என்பதுகூட தங்கள் பார்வை, என் பார்வையில் தாங்கள் கண்மூடித்தனமானவர், அல்லது காஸ்ட்ரோவை சர்வாதிகாரியாக காட்ட முனையும் அமெரிக்க சர்வாதிகாரத்தின் பிரசாரத்தை நம்பி ஏமாறுபவர்!

    க்யூபா போன்ற ஒரு சிறு நாடு அமெரிக்கா ஸ்பெயின் போன்ற சர்வாதிகார முதலைகளின் கபளீகரத்திலிருந்து தப்பி பிழைத்து நிலைக்க வேண்டுமானால், அதற்கு கட்டுப்பாடு மிக மிக தேவை, அதையே காஸ்ட்ரோ செய்தார் என்பது என் கருத்து. காஸ்ட்ரோ குடும்ப அரசியல் செய்கிறார் என்று குற்றம் சாட்டும் முன், க்யூப போராட்டத்தில் ரால்-இன் பங்கும் குறிப்பிடும் அளவு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சே குவேரா உயிரோடு இருந்து, அவர் ஆட்சியை ஏற்க ஒத்துக்கொள்வார் என்ற நிலையும் இருந்திருந்தால் காஸ்ட்ரோ ராலை அதிபராக்கி இருப்பாரா என்றும் சிந்திக்க வேண்டும்!

    ஒரு க்யூபனுக்கு காஸ்ட்ரோ எப்படிபட்ட ஆட்சியாளராய் தெரிகிறார் என்று எனக்குத் தெரியவில்லை, தங்களுக்கும் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன், என் பார்வையில் கட்டுப்பாடான ஆட்சியே நாட்டை முன்னேற்றும், ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு தனிமனிதனோ, ஒரு சிறு ஊரோ கூட வருந்துமானால் அந்த வருத்தம் நியாயமானதே!

    உலகின் பெரிய “மக்களாட்சி” நாடான இந்தியாவில் ஒவ்வோரு இந்தியனுக்கும் சரியான சுதந்திரம் இருக்கிறதா? சர்வாதிகாரத்துக்கு சற்றும் சளைக்காத ஆட்சிகள்தான் இங்கு நடக்கின்றன!

    எனினும், நண்ப, தங்கள் கருத்தை உள்ளதை உள்ளபடி வெளியிட்டமைக்கு நன்றி...


    அன்புள்ள கருணாகரசு,

    ஒரு நூலைப் படித்து படித்த ஆர்வத்தில் தோன்றிய ஒரு கவிதையை வலையில் இட, நண்பர் NO-வின் காரமான விமர்சனத்திற்கு அது உள்ளாக, ”அவசரப்பட்டுவிட்டோமோ!” என்று நான் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் தங்களின் ஆதரவான கருத்துரை ஆறுதலாகவும் அமைந்தது, நன்றி...

    புரட்சியை வெறுப்பவர்களும் உள்ளனர், விரும்புவர்களும் உள்ளனர், எந்த ஒரு வழிமுறையானாலும், கொள்கையானாலும் இது பொருந்தும்... அவரவரின் தனிப்பட்ட கருத்துகளே இவை என்பதினால் இதில் எதுவும் தவறும் இல்லை, எதுவும் சரியும் இல்லை, நாம் எந்த கொள்கை, எந்த முறையை பின்பற்றினாலும் மொத்தத்தில் அனைவரும் நலமாய் இருக்க வேண்டும் என்னும் அடிப்படை எண்ணமே காரணமாய் அமைகிறது...

    வாழ்க ஞாலம்!
    பணிவுடன்,
    விஜய் :-)

    ReplyDelete