[நேற்றைக்குப் பொழிந்த மழை தந்த பரிசுகள் இரண்டு - இந்தக் கவிதைகள் & ஜலதோஷம் :-) முன்னதை மட்டும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!]
இருண்ட முற்பகலின்
மெல்லிய தூறலில் நனைந்த
குளிர்ந்த காற்று
சன்னலைத் திறக்கையிலெல்லாம்
திறக்கிறது
என் மனதையும்...
துவங்கிய மழையைக் கண்ட
எல்லாப் பறவைகளும்
ஒதுங்க இடம் தேடத்
தான் மட்டும் தன்
சிறகுகளை விரித்துக்கொண்டு கிளம்புகிறது
என் மனது...
வாழ்க்கைக் கூத்திற்குப் போட்ட
அத்தனை வேஷங்களையும்
கரைத்துக் கழுவி
என்னை ‘நான்’ ஆக்குகிறது
என்னை நனைத்த மழை!
மழையைக் கண்டவுடன்
நனைவதற்காக
எனக்கு முன் ஓடுகிறான்
எனக்குள் இருக்கும் சிறுவன்...
அக்கறையான அம்மாவைப் போல்
அவன் கையைப் பிடித்துத் தடுக்கிறது
வளர்ந்துவிட்டதன் தயக்கம்!
நின்ற மழையோடு
நின்று விட்டன கவிதைகளும்
மழையில் கழுவப்பட்ட
மரங்களின் பச்சையாய்
மிச்சமிருக்கிறது மனதில்
மிளிரும் மகிழ்ச்சி...
குறிசொற்கள்
கவிதை
(39)
மரபுக்கவிதை
(25)
வெண்பா
(17)
ஆண்டாள்
(16)
மாணிக்கவாசகர்
(16)
மார்கழி
(16)
வாழ்க்கை
(14)
காதல்
(12)
தமிழ்
(12)
காலம்
(6)
விருத்தம்
(5)
ஹைக்கூக்கள்
(5)
நட்பு
(4)
பாரதியார்
(4)
சிந்து
(3)
திருக்குறள்
(3)
பண்டிகை
(3)
மிறைகவி
(3)
வாழ்த்து
(3)
ஆசிரியப்பா
(2)
கதைப்பாடல்
(2)
சிறுகதை
(2)
திரைப்படம்
(2)
பாசம்
(2)
விமர்சனம்
(2)
Farewell Poem
(1)
Friendship Poem
(1)
அரசியல்
(1)
இடையினப்பா
(1)
இரங்கற்பா
(1)
இரதபந்தம்
(1)
கண்ணதாசன்
(1)
கண்ணன்
(1)
கலிவெண்பா
(1)
கவியரங்கம்
(1)
கிராமம்
(1)
கிருஷ்ண
(1)
கூடசதுர்த்தம்
(1)
சதுரபந்தம்
(1)
சிலேடை
(1)
ஜெயலலிதா
(1)
தமிழ்ப் படம்
(1)
திரை விமர்சனம்
(1)
நாகபந்தம்
(1)
நான்காரைச் சக்கரபந்தம்
(1)
நாற்கூற்றிருக்கை
(1)
நிரோட்டகம்
(1)
நூல்
(1)
பின்பி
(1)
பொங்கல்
(1)
மகாபாரதம்
(1)
மடக்கணி
(1)
மழை
(1)
மாலைமாற்று
(1)
மெல்லினப்பா
(1)
மொழிபெயர்ப்பு
(1)
யமகம்
(1)
வஞ்சி விருத்த
(1)
வல்லினப்பா
(1)
வினாவுத்திரம்
(1)
ஷேக்சுபியர்
(1)
(கா) விஜயநரசிம்மன் 2007-2021
இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)
Hi Vijay.I am Maria . Kavithai nalla irukkuthu. Please continue. Na ini regular-a padipen.Valkai koothu enaku romba pidichuthu.
ReplyDelete//வாழ்க்கைக் கூத்திற்குப் போட்ட
ReplyDeleteஅத்தனை வேஷங்களையும்
கரைத்துக் கழுவி
என்னை ‘நான்’ ஆக்குகிறது
என்னை நனைத்த மழை!//
அழகான மழை கொடுத்த அருமையான கவிதை.
ரொம்ப நல்லாருக்கு விஜய்!
கவிதைகளைப் படித்து, கருத்தும் இட்டு, என்னை உற்சாகப்படுத்திய மரியாவிற்கும், சுந்தராவிற்கும் மிக்க நன்றி...
ReplyDeleteதோழர்களே...
ReplyDeleteஇந்த என் கவிதைகள் (முதல் மற்றும் மூன்றாவது பத்திகள் நீங்கலாக) குமுதம் இதழில் (24.11.2010 பக்கம் 62 - வாசகர் கவிதை)வெளியிடப்பட்டுள்ளன :-)
Hi.......... Vijay Your poerty is Very good please keeping it........
ReplyDelete