[தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா காலமான செய்தி அனைவரையுமே உலுக்கியது. எதிரிகள் கூட எதிர்ப்பார்க்கவில்லை என்றனர். எந்தக் கட்சியிலும் சாராத ஒரு சாதாரனத் தமிழனாய் என் உள்ளத்தில் பொங்கிய வரிகள் இவை... என் பேனா மூலம் அழப்பட்ட கண்ணீர்த்துளிகள்...]
அரசியல் அழுக்குகளை
அலம்பிவிட்டது மரணம்,
அக்கிரமங்களை எல்லாம்
மன்னித்தோ மறந்தோவிட்டோம்...
இனி
மனக்கண்ணில் மிஞ்சுவதெல்லாம்
எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் மீறி
அரியணை ஏறி
அஞ்சாது ஆண்ட
வீரப் பெண்மையின்
பெருமித சித்திரம்தான்...
அம்மா அம்மா என்று
அண்டியவர் அழைத்தபடி
அம்மாவாகத்தா ஆண்டார்
தன்
அலமாரிகளை நிரப்பிய பின்னர்,
நிரப்பியது நெருடிய பின்னர்...
தமிழ்நாட்டின் வரலாற்றில்
இவருக்கு உண்டு ஒரு அத்தியாயம்
நான் கண்ட தமிழ்நாட்டின்
இருபெரும் முதல்வரில் ஒருவர்...
ஹிந்திய முதலைகள்
தமிழ்நாட்டை விழுங்காமல் காத்ததில்
இவருக்கும் பங்குண்டு,
இனி
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையில்
இவருக்கும் பள்ளியுண்டு...
அரசியல் அழுக்குகளை
அலம்பிவிட்டது மரணம்...
பற்றுகொண்டு பதறினாலும்
பார்வையாளனாய் நின்றாலும்
பகைவனாய் பார்த்தாலும்,
சில துளி கண்ணீரை
சிந்தத்தான் செய்கிறது நெஞ்சு...
இதுவரை எங்களை ஆண்ட
இரும்புப் பெண்ணே கண்ணுறங்கு...
இதுவரை பட்டவை போதும்,
இனியேனும் நிம்மதியாய் கண்ணுறங்கு...
அம்மாவிற்கு என் அஞ்சலிகள் / 06.12.2016
அரசியல் அழுக்குகளை
அலம்பிவிட்டது மரணம்,
அக்கிரமங்களை எல்லாம்
மன்னித்தோ மறந்தோவிட்டோம்...
இனி
மனக்கண்ணில் மிஞ்சுவதெல்லாம்
எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் மீறி
அரியணை ஏறி
அஞ்சாது ஆண்ட
வீரப் பெண்மையின்
பெருமித சித்திரம்தான்...
அம்மா அம்மா என்று
அண்டியவர் அழைத்தபடி
அம்மாவாகத்தா ஆண்டார்
தன்
அலமாரிகளை நிரப்பிய பின்னர்,
நிரப்பியது நெருடிய பின்னர்...
தமிழ்நாட்டின் வரலாற்றில்
இவருக்கு உண்டு ஒரு அத்தியாயம்
நான் கண்ட தமிழ்நாட்டின்
இருபெரும் முதல்வரில் ஒருவர்...
ஹிந்திய முதலைகள்
தமிழ்நாட்டை விழுங்காமல் காத்ததில்
இவருக்கும் பங்குண்டு,
இனி
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையில்
இவருக்கும் பள்ளியுண்டு...
அரசியல் அழுக்குகளை
அலம்பிவிட்டது மரணம்...
பற்றுகொண்டு பதறினாலும்
பார்வையாளனாய் நின்றாலும்
பகைவனாய் பார்த்தாலும்,
சில துளி கண்ணீரை
சிந்தத்தான் செய்கிறது நெஞ்சு...
இதுவரை எங்களை ஆண்ட
இரும்புப் பெண்ணே கண்ணுறங்கு...
இதுவரை பட்டவை போதும்,
இனியேனும் நிம்மதியாய் கண்ணுறங்கு...
அம்மாவிற்கு என் அஞ்சலிகள் / 06.12.2016