தெரியுமா
நேரம் ஓடிக்கொண்டிருப்பது? 1
”கால வெள்ளம்” என்கிறோம்,
நனைக்கவில்லையே எதையும்
என்றேன்;
திரும்பிப் பார்க்கையில்
தெரிந்து கொண்டேன்
கண்கள் நனைந்ததை! 2
ஏனோத் தெரியவில்லை
காத்திருக்கும் பொழுதெல்லாம்
காலம் நீண்டுவிடுகின்றன
கடைசி சில நிமிடங்கள்! 3
(கா) விஜயநரசிம்மன், ஜனவரி 2010
அட நீங்க பதிவுலகத்துக்கு புதுசா விஜய்..:))
ReplyDeleteவாழ்த்துக்கள்.:) வெள்ளைசட்டை கவிதை
ரசித்தேன், இதுவும் நன்றாக இருக்கிறது. தமிலிஷ் தளத்திலும் இணைத்து விடுங்களேன்.