முன்குறிப்பு: என்னை மிகவும் கவர்ந்த கவிகளில் பாரதி முதன்மையானவன், அவன் வழியில் கவிதை எழுதிப்பார்ப்பது என் விருப்பங்களில் ஒன்று, அப்படி எழுதிய ஒரு பாடல் இது, 2010-இலேயே எழுதப்பட்டது, இன்னும் இங்கே இடவில்லை என்பதை இன்றுதான் உணர்ந்தேன், அந்த மகாகவியின் பிறந்தநாளில் இதை ஒருவித காணிக்கையாக இடுகிறேன்... நிறைகுறைகளை தயக்கமின்றி சுட்டலாம்...
ஓடி விளையாடு பாப்பா! – நீ
.....ஓய்ந்திருக்கல் ஆகாது பாப்பா!
ஆடிப் பாடிமகிழ் பாப்பா! – நீ
.....யாரையும் வையாதே பாப்பா! ௧
கல்வி கற்றுச்செறி பாப்பா! – உன்
.....கருத்தை உயர்த்திவை பாப்பா!
நல்ல குறளைநிதம் படித்து – அதில்
.....நழுவாமல் வாழ்ந்திடனும் பாப்பா! ௨
உலகம் நமக்குப்பொது பாப்பா! – இதில்
.....ஒருவரையும் ஒதுக்காதே பாப்பா!
பலதுறை அறிந்துகொள்ளு பாப்பா! – அறிவைப்
.....பகிர்ந்தும் பயன்பெறுநீ பாப்பா! ௩
இறைவன் ஒருவனெனு பாப்பா! – அவன்
.....இருப்பது அன்பிலெனு பாப்பா!
நிறைய பொருள்தேடு பாப்பா! – அதை
.....நேர்மை வழிதேடு பாப்பா! ௪
தாய்மொழி முதலிலறி பாப்பா! – பின்பு
.....தரணியின் மொழிகளறி பாப்பா!
ஆய்ந்து இனியசொல்லைப் பேசு – அதை
.....அனைவரும் விரும்பிடுவர் பாப்பா! ௫
நாட்டை உயர்த்திடவே எண்ணி – பல
.....நல்லசெயல் செய்திடுவோம் பாப்பா!
வீட்டையும் உயர்த்துபவர் பெண்கள் – அவர்
.....மேன்மைக்கு உழைத்திடுவோம் பாப்பா! ௬
பாட்டைக் கற்றுதெளி பாப்பா! – அது
.....படைத்தவன் மொழியாகும் பாப்பா!
ஓட்டை உடைசல்களை ஒழித்து – புது
.....ஒளியைக் கொண்டுவா பாப்பா! ௭
தாயை மதித்துவாழ் பாப்பா! – நீ
.....தந்தைசொல் தட்டாதே பாப்பா!
பேய்க்குநீ அஞ்சாதே பாப்பா! – அது
.....பித்தர் சொல்லுங்கதை பாப்பா! ௮
யாதும் ஊரென்னு பாப்பா! – நமக்கு
.....யாவரும் கேளீரே பாப்பா!
தீதும் நன்றும் நமக்கு – பிறர்
.....செய்து வருவதில்லை பாப்பா! ௯
உடலையும் உறுதிசெய் பாப்பா! – வீணர்
.....உருட்டலுக்கு அஞ்சாதே பாப்பா!
திடத்தை இழக்காதே பாப்பா! – அதில்
.....தீயும் கருகிவிடும் பாப்பா! ௧0
உன்திறம் நன்கறிந்து கொண்டு – இந்த
.....உலகிற்கு பயன்படு பாப்பா!
உன்னால் முடியாது என்றால் – அது
.....உலகாலும் முடியாது பாப்பா!! ௧௧
(கா) விசயநரசிம்மன், 2010
ஓடி விளையாடு பாப்பா! – நீ
.....ஓய்ந்திருக்கல் ஆகாது பாப்பா!
ஆடிப் பாடிமகிழ் பாப்பா! – நீ
.....யாரையும் வையாதே பாப்பா! ௧
கல்வி கற்றுச்செறி பாப்பா! – உன்
.....கருத்தை உயர்த்திவை பாப்பா!
நல்ல குறளைநிதம் படித்து – அதில்
.....நழுவாமல் வாழ்ந்திடனும் பாப்பா! ௨
உலகம் நமக்குப்பொது பாப்பா! – இதில்
.....ஒருவரையும் ஒதுக்காதே பாப்பா!
பலதுறை அறிந்துகொள்ளு பாப்பா! – அறிவைப்
.....பகிர்ந்தும் பயன்பெறுநீ பாப்பா! ௩
இறைவன் ஒருவனெனு பாப்பா! – அவன்
.....இருப்பது அன்பிலெனு பாப்பா!
நிறைய பொருள்தேடு பாப்பா! – அதை
.....நேர்மை வழிதேடு பாப்பா! ௪
தாய்மொழி முதலிலறி பாப்பா! – பின்பு
.....தரணியின் மொழிகளறி பாப்பா!
ஆய்ந்து இனியசொல்லைப் பேசு – அதை
.....அனைவரும் விரும்பிடுவர் பாப்பா! ௫
நாட்டை உயர்த்திடவே எண்ணி – பல
.....நல்லசெயல் செய்திடுவோம் பாப்பா!
வீட்டையும் உயர்த்துபவர் பெண்கள் – அவர்
.....மேன்மைக்கு உழைத்திடுவோம் பாப்பா! ௬
பாட்டைக் கற்றுதெளி பாப்பா! – அது
.....படைத்தவன் மொழியாகும் பாப்பா!
ஓட்டை உடைசல்களை ஒழித்து – புது
.....ஒளியைக் கொண்டுவா பாப்பா! ௭
தாயை மதித்துவாழ் பாப்பா! – நீ
.....தந்தைசொல் தட்டாதே பாப்பா!
பேய்க்குநீ அஞ்சாதே பாப்பா! – அது
.....பித்தர் சொல்லுங்கதை பாப்பா! ௮
யாதும் ஊரென்னு பாப்பா! – நமக்கு
.....யாவரும் கேளீரே பாப்பா!
தீதும் நன்றும் நமக்கு – பிறர்
.....செய்து வருவதில்லை பாப்பா! ௯
உடலையும் உறுதிசெய் பாப்பா! – வீணர்
.....உருட்டலுக்கு அஞ்சாதே பாப்பா!
திடத்தை இழக்காதே பாப்பா! – அதில்
.....தீயும் கருகிவிடும் பாப்பா! ௧0
உன்திறம் நன்கறிந்து கொண்டு – இந்த
.....உலகிற்கு பயன்படு பாப்பா!
உன்னால் முடியாது என்றால் – அது
.....உலகாலும் முடியாது பாப்பா!! ௧௧
(கா) விசயநரசிம்மன், 2010
பாப்பாவை மிரளவைக்கதீர்கள். பாட்டும், விளையாட்டும், முன் நிற்ப்பது நன்றே.
ReplyDeleteமற்ற கருத்துக்கள் பல பாடல்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு பருவத்தினருக்கு கூற உகந்தவை.